வேளாண் நிலங்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது!

– அன்புமணி ராமதாஸ்
*
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் ஏற்கனவே இரண்டு சிப்காட் நிறுவனங்கள் இருக்கையில், மற்றொரு சிப்காட்டை உருவாவதற்கு அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இதையடுத்து போராட்டத்தை முன்னெடுத்த விவசாயிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இதற்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திரண்டு மக்கள்  போராட்டம் நடத்தினர்.

விவசாய நிலங்களை சிப்காட்டுக்காகக் கையகப்படுத்துவதை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமை தாங்கிய டாக்டர் அன்புமணி ராமதாஸ், “விவசாய நிலத்தை அழித்து எந்தத் தொழில் முன்னேற்றமும் தேவையில்லை என்பது தான் பாம.க.வின் கொள்கை.

முப்போகம் நெல் விளையும் பூமியைக் கையகப்படுத்துவதை அனுமதிக்க வேண்டாம். சுற்றிலும் எவ்வளவு ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் இருக்கின்றன? அந்த இடத்தில் சிப்காட்டை உருவாக்கலாமே?” என்றார்.

பெரும் ஆரவாரத்திற்கு இடையில் இப்படிப் பேசினார் அன்புமணி.

Comments (0)
Add Comment