இந்திய கிரிக்கெட் வீரர் சமி!
உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் சில லீக் ஆட்டங்களில் அணியில் இடம்பெறாத முகமது சமி அதன்பின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சமி கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி, இதுவரை 23 விக்கெட்டுகளை சமி கைப்பற்றியுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் சமி கொண்டாடப்பட்டு வருகிறார்.
நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் இரண்டு சாதனைகளை முகமது சமி படைத்துள்ளார்.
முதல் சாதனை அரையிறுதிப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தது, இரண்டாவது சாதனை 2023 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இதேபோல், உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அதோடு, உலகக் கோப்பையில் 4 முறை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய சாதனையையும் சமி படைத்துள்ளார்.
இந்நிலையில், பந்துவீச்சில் வெற்றிகரமாக செயல்படுவதன் காரணம் குறித்து, முகமது சமி மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்து வீசியதே வெற்றிக்கு காரணம் என்றும் அதில் பதிலளித்துள்ளார்.