விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தில் ஏனிந்த தடுமாற்றம்?

வேளாண் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோது டெல்லியில் எவ்வளவு விவசாயிகள், எத்தனை காலம் போராடினார்கள்? எத்தனை பேர் உயிரை விட்டார்கள்?

பல மாதங்கள் கழித்தே வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

வாபஸ் பெற்றதற்கு விலை பல விவசாயிகளின் உயிர்கள்.

அப்போது ஒன்றிய அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது பலருக்கு நினைவில் இருக்கலாம். தி.மு.க. கூட அப்போது ஒன்றிய அரசின் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தது.

இப்போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உருவாகும் சிப்காட் தொழிற்பேட்டையை எதிர்த்து விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து விவசாயிகள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களில் ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. பாயக் காரணமாக இருந்தவர் மாவட்ட ஆட்சித் தலைவர் என்றாலும் அதற்கு அவர் மட்டும் தான் காரணமா?

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டதற்குப் பலதரப்பில் கண்டனங்கள் எழுந்தபிறகு தற்போது குண்டர் சட்டத்தை ரத்து செய்திருக்கிறார்கள்.

ஏன், குண்டர் சட்டத்தைப் பிரயோகிப்பதில் அவசரம் காட்டினார்கள்? இப்போது அதே அவசரத்துடன் ஏன் ரத்து செய்திருக்கிறார்கள்?

ஏனிந்தத் தடுமாற்றம்?

விவசாயிகள் பிரச்சினையில் ஒன்றிய அரசு பாணியில் மாநில அரசும் செல்வது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல!

Comments (0)
Add Comment