டாக்டர் பட்டமா சங்கரய்யாவுக்கு பெருமை சேர்க்கும்?

நூற்றாண்டைத் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அபூர்வமான அரசியல் தலைவர் சங்கரய்யா.

விருதோ, பட்டமோ அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவோ, அதற்கான எதிர்பார்ப்புடன் அவரோ – இல்லை என்றாலும், அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முயற்சி நடந்தபோது அதற்கும் அனுமதி தர மறுத்தவர் – சுதந்திப் போராட்டத் தியாகிகளுக்கு மதிப்பளிப்பதைப் பற்றிப் பேசுகிறவரான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.

இந்தச் சர்ச்சை ஒருபுறம் இருக்க, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சங்கரய்யா.

Comments (0)
Add Comment