‘நரைச்ச முடி’ – முற்றிலும் வேறு வகையான பாடல்!

‘துருவ நட்சத்திரம்’ படம் இந்த மாதம் 24 இல் வெளியாக உள்ளது. இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஒரேயொரு பாடல்தான் முன்னம் இருந்தது – ‘ஒருமனம் நிற்கச் சொல்லுதே!’. வேறு பாடல்களுக்கு இடமில்லாத வகைப் படம் என்று பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார் கவிஞர் தாமரை.

எனினும் கதை, சில மாற்றங்களுக்குட்படுத்தப்பட்ட போது பாடல்கள் சேர்க்க வேண்டியிருந்தது.

எனவே சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்திற்காக மேலும் இரண்டு பாடல்கள் எழுதியிருந்தேன். அதிலொன்றான ‘நரைச்ச முடி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

கௌதம், ஹாரிஸ், நான் (தாமரை) – கூட்டில், இதற்குமுன் இந்த வகையான பாடலை எழுதியதாக நினைவில்லை.

முற்றிலும் வேறுவகைப் பாடல் ! எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இசை கூட்டியிருக்கிறார் ஹாரிஸ். கேட்டுப்பாருங்கள்.

Comments (0)
Add Comment