ஒன்று சேர்க்கும் உடை!

கேரளா மாநிலத்தில் ‘கேரளீயம் 2023’ (Keraleeyam 2023) விழா கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த விழா நவம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கேரளா மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாச்சாரம், பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக விழா நடைபெற்று வருகிறது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்த இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், நடிகை ஷோபனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் அனைவரும் ஒன்று போல பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த கேரளீயம் விழாவில் பல அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

Comments (0)
Add Comment