பரவும் காய்ச்சல்: எச்சரிக்கையோடு இருப்போம்!

பரவலாக அங்கங்கே மழை பெய்து நீர் தேங்கி காற்றில் குளிரின் பதம் கலந்திருக்கிறது.

இந்தச் சூழல் மாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் உடல் திணறுகிறது. வெப்பம் உயர்ந்து இறங்குகிறது. மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் பலர் குவிந்திருக்கிறார்கள்.

சாதாரண காய்ச்சல் என்றால் பரவாயில்லை. இதில் டெங்குவும் சேர்ந்து பரவிக் கொண்டிருப்பது தான் ஆபத்து.

பலர் தமிழகத்திலேயே டெங்குவின் பாதிப்புக்குள்ளான நிலையில், ஒரே நாளில் டெங்கு பாதிப்புள்ளாகி இறக்கும் அளவுக்குப் போயிருப்பது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு இதைக் கட்டுப்படுத்த தனியாகச் சிறப்பு முகாம்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும், பொது மக்கள் தான் மழைக் காலத்திலும், தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கும் நேரத்தில் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மக்கள் கூடுமிடங்களில் நம்முடைய பாதுகாப்பு குறித்த அக்கறையுடன் இருப்போம். நம் குழந்தைகளின் பாதுகாப்பிலும் கவனமாக இருப்போம்.

Comments (0)
Add Comment