கூழாங்கல்: திரைக்கலையை நேசிப்பவர்களுக்கான விருந்து!

“மூன்றாவது தடவையோ நான்காவது தடவையோ மீண்டும் பார்த்தேன். இந்த முறை Sony liv OTT. Raw ஸ்டைல் மேக்கிங். ஆனால் narration ஒரு ஒழுங்குடன் செல்கிறது” என்று பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு கூழாங்கல் படத்தைப் பற்றிய அனுபவத்தை எழுதியுள்ளார் கோவையைச் சேர்ந்த ஓவியக் கலைஞரும் திரைப்பட விமர்சகருமான ஜீவானந்தன்.

கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை மீண்டும் கூட்டி (இழுத்து) வர, தன் மகனையும் இழுத்துச் செல்கிறான் ஒரு arrogant தகப்பன்.

பீடிப்புகை, வியர்வை பொங்கி வரும் கருத்த மேனி, வெறுப்புப் பார்வை, வறண்ட பிரதேசம், மினி பஸ் பயணம், எலிக்கறி சமைத்தல், பூமியிலிருந்து ஊறி வரும் குடிநீருக்கான காத்திருத்தல் என்று செல்கிறது இந்த 75 நிமிட திரைப்படம்.

ஜீவானந்தன்

இத்தகைய முயற்சிகள், நயன்தாரா போன்ற ஒரு தயாரிப்பாளர் இணையும்போது, படத்தை உலகெங்கும் கொண்டு செல்கின்றன.

யுவன் ஷங்கர்ராஜா போன்ற ஒரு புகழ்பெற்ற பெயரையும் படத்துடன் இணைக்க முடிகிறது! திரைக்கலையை நேசிப்பவர்களுக்கு ஒரு திரைப்படம்.

இயக்குனர் வினோத்ராஜும், தயாரிப்பாளர் நயன்தாராவும் பாராட்டுக்குரியவர்கள்.

Comments (0)
Add Comment