தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைத்துக் கொள்ளும்!

– சுப்பிரமணிய சுவாமி

தந்தி தொலைக்காட்சியில் அசோக வர்ஷிணி எடுத்த டாக்டர் சுப்பிரமணிய சுவாமியின் பேட்டியில் வழக்கம் போல பட்டாசு ரகத்தில் அவர் கொடுத்த பதில்களைப் பார்க்கலாம்.

முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் போரைப் பற்றிய கேள்விக்கு ‘’ஹமாஸை அழித்த பிறகு தான் இந்தப் போர் முடிவுக்கு வரும். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இஸ்ரேலைத் தான் ஆதரிக்கின்றன’’ என்றார் சுவாமி.

பிரதமர் மோடி தன்னிச்சையாக சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்து கொள்கிறார்.

அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தித் தேர்தலைச் சந்தித்தால் தோல்வி உறுதி. அதனால் பிரதம வேட்பாளராக வேறு ஒருவரை பா.ஜ.க அறிவிக்க வேண்டும். ஆனால் இவரைத் தான் அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.

மத்தியில் சரியான நிர்வாகத் திறமை இல்லை. இந்திய அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

அ.தி.மு.க, தி.மு.க போலத் தான் தமிழக பா.ஜ.க.வும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க மறுபடியும் பா.ஜ.க.வுடன் ஒன்று சேராது. பா.ஜ.க.வை ஓரம் கட்ட தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன. இது எனக்குக் கிடைத்த தகவல்.

தங்களுக்குள் செய்து கொண்ட உடன்பாட்டின்படி தான் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’’ – தொடர்ந்து இப்படியே பேசிக்கொண்டு போனார் சுப்பிரமணிய சுவாமி.

Comments (0)
Add Comment