ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மனதின் குரல் என்ற பெயரில் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் நேற்று பேசிய அவர், “கடந்த காலங்களில்30 ஆயிரம் கோடிக்கு மட்டுமே விற்பனையான காதிப் பொருட்கள் இந்த மாதம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு விற்பனையாகி உள்ளது என்றும் விவசாயிகள், குடிசைத் தொழில் செய்வோர், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் இந்த விற்பனையால் பயனடைந்துள்ளனர் என்றும் கூறினார்.
சுற்றுலா செல்லும் போது, ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளும்போதும் காதி கிராப்ட் தயாரிப்புப் பொருட்களை வாங்குங்கள் என்றும் விழாக் காலங்களில் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அதோடு, இலக்கியம் மூலம் எழுத்தாளர் சிவசங்கரி நாட்டை இணைத்து வருகிறார் என்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.கே.பெருமாள் கதை சொல்லும் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகிறார்” என்றும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.