ஒரு கோட்டோவியமும் சில வார்த்தைகளும்!

‘இந்திரன் 70’ என்ற தலைப்பில் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு, ஈரோட்டிலிருந்து ஓவியர் சுந்தரம் முருகேசன் வந்திருந்தார். 40க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பங்குகொண்ட கண்காட்சி நிகழ்ச்சி அது.

இரவெல்லாம் கண்விழித்து அவர் வரைந்த இந்திரனின் கோட்டுச் சித்திரம் ஒன்றை கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்.

முன்பின் சந்தித்திராத ஒருவர் என்மீது அவ்வளவு அன்புடன் அந்த சித்திரத்தை கொண்டு வந்து கொடுத்தபோது நான் நெகிழ்ந்துபோனேன்.

அந்தக் கண்காட்சியை அமைத்திருந்த ‘புதுவை முத்தமிழ்ச் சங்கம்’ பழனி ஸ்வாமி உடனே அந்தக் கண்காட்சியில் ஓவியர் சுந்தரன் முருகேசனுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

அப்போது அங்கு புதுவையின் மிகச்சிறந்த நீர்வண்ண ஓவியரான ஏழுமலை, கவிஞர் நா. வே. அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இன்று சுந்தரன் முருகேசன் தமிழகத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் எல்லோருடைய சித்திரங்களையும் படைத்த மிக முக்கியமான ஒரு ஓவியராக திகழ்கிறார்.

இவரது ஓவியங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு கண்காட்சி வைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பொறுத்திருந்து பார்ப்போம் நிறைவேறுகிறதா என்று.

– நன்றி: இந்திரன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment