வறுமை தந்த நேர்மை!

என் கணவரின் இரண்டு பால்ய நண்பர்கள் டிபார்ட்மெண்டில் என்னுடன் பணிபுரிகின்றனர்.

வேறு வேறு ஸ்டேஷன்களில் அவர்கள் பணிபுரிந்தாலும் ஏதாவது அலுவலாக அவர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவேண்டி இருந்தால் மிக கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வார்கள்.

அவர்கள் இருவரும் இதுவரை டிபார்ட்மெண்ட்டில் எந்த கெட்டப் பேரும் வாங்கியது இல்லை. வீடு, குடும்பம் என இருப்பர்.

இரு நாள்களுக்கு முன்பு இவரின் நண்பர் வீட்டுத் திருமணத்துக்கு சென்றிருந்தபோது அந்த இருவரில் ஒருவர் தனது மனைவியுடன் வந்திருந்தார். நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுவிட்டனர்.

அதன் பின்பு என் கணவர் கூறினார். இவர் சிறுவயதில் மிக கஷ்டப்பட்ட குடும்பம். மிக வறுமையில் படித்து இந்தப் பணியை பெற்றார் என்றும் அவர் தலையெடுத்த பிறகுதான் அவர் குடும்பமே கொஞ்சம் நிமிர்ந்தது என்றும் சொன்னார்.

இப்போது அவர் சொந்த வீடு கட்டிவிட்டார், பிள்ளைகள் வளர்ந்துவிட்டனர். ஆனாலும் அவர் எந்தவிதமான பணம் தொடர்பான புகார்களிலும் சிக்காமல் நேர்மையாக இருந்து வருகிறார் என்றார்.

அப்போதுதான் புரிந்து கொண்டேன் நேர்மை என்பது பெற்றோர் வளர்ப்பிலும் வாழ்க்கை நெறியிலும்தான் உள்ளது என.

என்ன நான் சொல்வது சரிதானே!

நன்றி: கமலி ஆனந்த் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment