நடிகராகிறார் தோழர் முத்தரசன்!

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் தயாராகும் திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நடிக்கிறார்.

இயக்குநர் விஜயகுமார் இயக்கும் இந்தத் திரைப்படம் அரிசி விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகத் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நடிக்கிறார்.

அவர் பங்கு பெற்ற படப்பிடிப்பின் காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் இந்தப் படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment