அருமை நிழல்:
தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார் தேங்காய் சீனிவாசன். அவருடைய தந்தை எழுதிய ‘கலாட்டா கல்யாணம்’ மேடை நாடகத்தில் அறிமுகமானார்.
அதற்குப்பிறகு, ரவீந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார். இவர் கே. கண்ணனின் கல் மணம் நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார்.
அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த கே. ஏ. தங்கவேலு, இவரை தேங்காய் ஸ்ரீநிவாசன் என்றே எல்லாரும் அழைக்க வேண்டும் என்று கூறினார். அதுமுதல் அந்த பெயரே அவருக்கு நிலையாகிப்போனது.
தேங்காய் ஸ்ரீநிவாசன், ஒரு விரல் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்.
அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.
சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள தேங்காய் ஸ்ரீநிவாசன், சிவாஜி கணேசன் நடித்த கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.
விழாவில் ஒன்றில் பங்கேற்றபோது தேங்காய் சீனிவாசனும் இசைஞானி இளையராஜாவும் எடுத்துக் கொண்ட புகைப்படம்.