ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துவோம்!

அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது? அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது? என்பது பற்றித் தெரிந்து கொள்வோம்.

அஜினோமோட்டோ என்பது ஒரு சுவை கூட்டும் உப்பு. அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்.

பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்டச் சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்,
அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும்.

ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று நினைக்கிறோம்.

அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல.

அது ஒரு கம்பெனியின் பெயர். ஜப்பானில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது.

உண்மையில் இந்த உப்பின் பெயர் மோனோ சோடியம் குளுட்டாமேட் (Monosodium glutamate) (MSG) என்பதாகும், இதனை மருத்துவ உலகில் மெதுவாகக் கொல்லும் விஷம் (slow killer) என்கிறார்கள்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ, சிவோவை தலைமையிடமாக கொண்டு, கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது,

அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி (Seaweed) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் மோனோ சோடியம் (monosodium) ஆகும்.

முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர் தரமானதாக இருந்தது.
ஆனால் 1917-ல் அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்த்து, வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையில், Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும், அந்த மோனோ சோடியம் உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர். 

குளுட்டாமேட் என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரியமாகும். ஒரு முறை உண்டால், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்.

முதலில் இந்த குளுட்டாமேட்டை உபயோகித்து, ஆர்ட்டிஃபிசியல் ஸ்வீட்னர் (Artificial Sweetener) என்னும் ஆஸ்பர்டேம்-ஐ (Aspartame) தயாரித்து வந்தனர்.

பிறகு இதன் அபாயமறிந்து, அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர். ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.

இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில், தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை, பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்.

சாலையோரக் கடைகள் தொடங்கி, மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் வரையிலும், சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும், இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை.

முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான், அஜினோமோட்டோ தூவப்படும் என்ற மாயை போய், தமிழகத்து ரசம் வரை இதை தூவ ஆரம்பித்துவிட்டார்கள்.

அது நாம் விரும்பியும், விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது.

குறிப்பாக குழந்தைகள் அவர்கள் உண்ணும் பாக்கெட் சிப்ஸ், கிரீம் பிஸ்கட், சாதாரண பிஸ்கட், நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள்,

டின்னில் வரும் மீன், சிக்கன், ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள், சாக்லேட்கள், கேஎஃப்சி, பீட்சா, மேகி மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாவற்றிலும் அஜினோமோட்டோ கலக்கப்படுகிறது.

*அஜினோமோட்டோவால் வரும் பக்க விளைவுகள்:-*

1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி.

2. குளுட்டாமேட் இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால், அதிகமான பசி எடுக்கிறது. நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது.

பிறகு அதை குறைப்பது மிக கடினம். உடல் எடை கூடினால், தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.

3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும். ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.

4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி, பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும்.

5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சில நேரம் வலியும் உருவாக்கும்.

6. முகத்தில் எந்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணர்வார்கள், அரிப்பும் தோன்றும், சிலரது முகம் கருத்திருக்கும்.

7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை, அதீத வியர்வை சுரப்பியால் உண்டாகும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.

8. இவை எல்லாம் ஒரு நாள், நம்மை புற்றுநோயிடம் இழுத்துச் செல்லும்.

உடலுக்கு இத்தனை கேடுகள் உருவாக்கக் கூடிய அஜினோமோட்டோவை தவிர்ப்போம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவோம்.

– நன்றி: வார இதழ்

Comments (0)
Add Comment