63 மில்லியன் பார்வைகளைக் கடந்த லியோ டிரெய்லர்!

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 67-வது படமான ‘லியோ’ திரைப்படம் உருவாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த லியோ படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். 14 ஆண்டுகள் கழித்து விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி என 4 படங்களின் வரிசையில், 5-வது முறையாக விஜய் – த்ரிஷா கூட்டணி அமைந்துள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மாஸ்டர் படத்துக்கு பிறகாக விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2-வது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக விஜய்யின் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய் பிறந்தநாளில் லியோ படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலை படக்குழு வெளியிட்டது.

படத்தின் 2-ம் பாடலான ‘Badass’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் 6-ம் தேதி வெளியானது. முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் இடம்பெற்ற டிரெய்லராக உருவாகி இருக்கிறது.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டிரெய்லர் வெளியானது.

டிரெய்லர் வெளியான 4 மொழிகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 24 மணி நேரத்தில் 63 மில்லியன் பார்வைகளையும் 4.1 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.

குறிப்பாக தமிழில் மட்டும் 24 மணி நேரத்தில் 43 மில்லியன் பார்வைகளையும், 2.9 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment