சில நிமிடங்களில் ஓர் அனுபவம்!

நேற்று மாலை விருகம்பாக்கத்திலுள்ள டி மார்ட்டுக்கு என் மகளுடன் வீட்டுக்குத் தேவையான சில பொருட்கள் வாங்கச் சென்றிருந்தேன். ரெங்கநாதன் தெருவைப் போலக் கூட்டம். மூச்சு முட்டியது. முதல் தளத்தில் தேவலாம்.

என் மகள் அங்கே இங்கே அலைந்து பொருட்களை எடுத்துவந்தார். எனக்குத் தேவை என வாட்டர் பாட்டில் ஒன்றை எடுத்தேன். அது அழகாக இருந்தது. விலை ரூ.79. தனக்கும் ஒன்று என மகளும் எடுத்துக்கொண்டார்.

கடைசியாக பில் கவுண்டரில் க்யூவில் நின்றோம். எனக்குப் பின்னே ஒருவர் மனைவியுடன் நின்றுகொண்டிருந்தார். பணி ஓய்வுபெற்றவரைப் போல தெரிந்தார்.

நாங்கள் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து ஆசையாக பார்த்தார். என்ன விலை என்றும் கேட்டார்.

நாமும் ஒன்று வாங்கியிருக்கலாம் என்றார் மனைவியிடம். நான் உடனே “எங்களுக்கு ஒன்று போதும். நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன். மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார்.

என் முறை வரும்போது டெபிட் கார்டு மூலம் பணத்தைச் செலுத்தமுடியவில்லை. பல முறை முயன்றும் கார்டு செயல்படவில்லை. பின்னே அணிவகுத்து நின்றது கூட்டம்.

நிலைமை புரிந்த கவுண்டரில் இருந்த பையன், எனக்குப் பின்னே நின்ற அவரிடம், “உங்கள் கார்டில் எடுத்துக்கொள்கிறோம். அவர் ஜிபேயில் அனுப்பிவிடுவார்” என்றார். உடனே அவரும் தயக்கமின்றி ஒப்புக்கொண்டார்.

சில நிமிடங்களில் ஓர் அனுபவம்…!

– சுந்தரபுத்தன் முகநூல் பதிவு.

Comments (0)
Add Comment