வாழ்க்கையை இயல்பாக அதன் போக்கில் விடுங்கள்!

கன்பூசியஸ் என்ற மகான் லூலியாங் என்ற மாபெரும் நீர்வீழ்ச்சியைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

அது சுமார் 200 அடிக்கு மேலே இருந்து விழுந்து கொண்டிருக்கிறது. அதனுடைய நுரை சுமார் 15 மைல் தூரம் வரை செல்கிறது.

அவ்வளவு வேகம் பலவீனமான மென்மையான பொருட்கள் அந்த நீர்வீழ்ச்சியில் பட்டால் உயிரோடு இருக்காது.

இருந்தாலும் அதனுள் ஒரு கிழவர் செல்லுவதை கன்பூசியஸ் பார்த்து விட்டார்.
அந்த கிழவருக்கு கண் தெரியவில்லையா? அல்லது தற்கொலையா என்று திகைத்துவிட்டார்

சீடர் ஒருவரை அழைத்து “ஓடிச் சென்று அந்த கிழவரை காப்பாற்றுங்கள்” என்றார்.

ஆனால், அந்த கிழவர் அந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து சுமார் 100 அடி தூரத்தில் நீர் சொட்ட சொட்ட எழுந்து ஆற்றின் வேகத்திலேயே சென்று கரையில் ஒதுங்கி ஏறினார்.

கன்பூசியஸ் ஆச்சரியப்பட்டு அந்த கிழவரிடம் ஓடிச் சென்று கேட்டார்.
“இந்த சக்தி வாய்ந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து எப்படி கரை ஏறினீர்கள்?” என்று.

அதற்கு அந்த கிழவர், “நான் எதுவும் எதிர்த்து செய்ய மாட்டேன். அப்படி எதிர்க்கவும் எனக்கு தெரியாது. அந்த சுழற்சியின் போக்கிலேயே எந்தவித மறுப்பும் சொல்லாமல் செல்வேன். பிறகு சுலபமாக வெளியே வந்து விடுவேன்.” என்றார்.

வாழ்க்கையை இயல்பாக அதன் போக்கில் விடுங்கள். அதுவே மனித வாழ்வின் சகல பிரச்னைகளுக்கும் இது தான் வழி என்பதை அப்போது தான் உணர்ந்து கொண்டாராம் கன்பூசியஸ்.

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment