சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 10ஆம் நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில், இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 55.68 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கல பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
முன்னாள் வீராங்கனை பி.டி.உஷாவின் 39 ஆண்டு கால தேசியச் சாதனையை வித்யா ராம்ராஜ் சமன்செய்தது குறிப்பிடத்தக்கது.
மும்முனை தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் சித்திரவேல் தனது ஆறாவது முயற்சியில் 16.68 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கத்தை தனதாக்கினார்.
மகளிருக்கான 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 15:14.75 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்று அசத்தினார்.
ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் முகம்மது அப்சல் வெள்ளி பதக்கம் வென்றார். 1,500 மீட்டர் Decathlon போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இந்திய வீரர் தேஜஸ்வின் 7666 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனை அன்னுராணி 62.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்று அசத்தினார்.
நீரஜ் ஜோப்ரா 88.88 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கமும்; கிஷோர் ஜனா 87.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு தொடரில் 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது.