“வாழ்க்கை என்பதே அனுபவத்தின் திரட்சி தானே.
உணர்ச்சி கூட அனுபவம் என்ற அகண்டத்துள் ஒரு தனித்திவலை தான்.
அனுபவத்துக்கு ஒரு ‘சுரணையுள்ள – சென்ஸிட்டிவ்’வான உள்ளம் ஈடுகொடுத்து, அதையே எழுப்பியும் காட்டினால் கலை எந்த உருவிலும் அமைந்து விடுகிறது.
மொழியுருவின் கலை வடிவிலோ, நாம் அனுபவத்தை வசனத்தில் வெளியிடுகிறோம்.
கவிதை என்ற பிரயோகமோ?
அனுபவத்தின் ஒரு இறுகிய நிலை தான் கவிதை”
– சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழில் “பேச்சு, எழுத்து, இணக்க நடை” என்ற தலைப்பில் தருமு சிவராமு எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.