ஜெயிலர் படத்தின் ஹூக்கும் வீடியோ பாடல் வெளியானது!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் அதாவது 7 நாட்களில் ரூ.375.40 கோடிக்கு மேல் வசூலையும் 14 நாட்களில் 525 கோடிக்கு மேல் வசூலையும் எட்டிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகிய 3 பேருக்கும் தயாரிப்பு நிறுவனம் புதிதாக காரை பரிசாக அளித்தது.

தொடர்ந்து இத்திரைப்படம் ஓ.டி.டி. (Amazon Prime) தளத்தில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ஹூக்கும் வீடியோ பாடலை படக்குழு யூடியூபில் வெளியிட்டது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment