இயேசு தன்னை கடவுளின் மகன் என்று சொல்லிக்கொண்டார். நபி தன்னைக் கடவுளின் தூதர் என்று சொல்லிக்கொண்டார். புத்தர் கடவுள் இல்லாத இந்த உலகத்தில் தான் ஒரு மனிதன் மட்டுமே என்று சொன்னார். உங்களுக்கு நீங்களே தீபமாய் இருங்கள் என்று சொன்னார்.
ஆத்மா என்று ஒன்று கிடையாது என்று சொன்னார். கர்மா என்ற ஒன்று கிடையாது என்று சொன்னார். பௌத்தம் ஒரு மதம் அல்ல. அது ஒரு அற வழி என்று சொன்னார்.
இன்று பௌத்தத்தை ஒரு மதமாக்கியவர்கள் புத்தரை கடவுள் ஆக்கினார்கள்.
போர் என்பதே உலகை விட்டு ஒழிய வேண்டும் என்று சொன்ன புத்தரின் பெயரால் சக மனிதர்களைக் கொல்லவும் துணிந்தார்கள்.
புத்தர் இன்று மிகவும் களைப்படைந்து விட்டார். அவருக்கு இன்று தேநீர் கொடுத்து உற்சாகப்படுத்தி எதையும் கேள்விக்கு உட்படுத்தும் சிந்தனை மரபை நாம் இன்று முன்னெடுப்போம்.
– எழுத்தாளர் இந்திரன்