எஸ்.பி.பி: குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் மகா கலைஞன்!

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் திருவள்ளூர் மாவட்டம், கோனேட்டம்பேட்டையில் எஸ்.பி.சாம்பமூர்த்தி மற்றும் சகுந்தலாம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள். ஐந்து சகோதரிகள்.

* எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தந்தை ஒரு நடிகர், பல்வேறு நாடகங்களில் நடித்தவர். அவர் ஒரு பிரபலமான ஹரிகதா விரிவுரையாளராகவும் இருந்தார். எஸ்.பி.பி-யின் தாயார் இல்லத்தரசி.

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறு வயதிலிருந்தே இசை கற்கத் தொடங்கினார். அனந்தபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வந்த இவர், டைபாய்டு காய்ச்சல் காரணமாக படிப்பை கைவிட நேர்ந்தது.

* பாடகி எஸ்.பி. சைலஜா, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடன்பிறந்த சகோதரி.  எஸ்.பி.பியின் மகன் சரணும் முன்னணிப் பாடகர் தான்.

கீரவாணி, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற போன்றவர்கள் இசையில் பாடியுள்ளார். அதே போல் தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார்.

* எஸ்.பி. பாலசுப்ரமணியம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பிற மொழிகளில் சேர்த்து 46,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

* பாடுவதைத் தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுமார் 48 தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிகராக கடைசியாக நடித்த படம் ஸ்ரீராம் ஆதித்யாவின் தேவதாஸ் (2018).

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் டப்பிங் கலைஞராக சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். தெனாலியின் (2000) தெலுங்குப் பதிப்பில் கமல்ஹாசனுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.

* தி நியூஸ் மினிட் செய்தியில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் 12 மணி நேரத்தில் இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 21 கன்னடப் பாடல்களை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆறு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இது தவிர, தமிழ்நாடு மாநில விருது மற்றும் கர்நாடக மாநில விருது போன்றவற்றையும் வென்றுள்ளார்.

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் பத்மஸ்ரீ (2001) மற்றும் பத்ம பூஷன் (2011) ஆகிய விருதுகளையும் பெற்றவர்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருது எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டது.

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுவாரஸ்யமாக தான் பொறியியல் படித்த அனந்தபுரமு ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

* ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகார்ஜுனா, சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு 5 தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலக வாழ்க்கையில் குரல் கொடுத்தவர் என்கிற பெருமைக்குரிய ஒரே மனிதர் எஸ்பி பாலசுப்ரமணியம்.

* எஸ்.பி.பி எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிமுகப் பாடலை பாடுபவர். இவருடைய கடைசி பாடலும் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற ‘அண்ணாத்த… அண்ணாத்த…’ என்கிற பாடலாகவே அமைந்தது.

* கடந்த 2020 ஆம் ஆண்டு இதே நாள் ரசிகர்கள் மனதை ரணமாக்கிவிட்டு சென்ற எஸ்.பி.பி.யின் உடல், திருவள்ளுவர் மாவட்டம், தாமரைப்பாகத்தில் அமைந்துள்ள இவருக்கு சொந்தமான ஃபாம் ஹவுசில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment