ஒரு தெலுங்கு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பரிசு வாங்கி கொண்டிருந்தார் எஸ்.பி. பி. மூன்றாவது ஆண்டும் வெற்றி பெற்றால் பாலுவிற்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று பரிசாகக் கிடைக்கும்.
இந்நிலையில் மூன்றாவது ஆண்டு போட்டியில் சங்கத்தின் பொறுப்பாளர்களில் சிலர் எஸ்.பி. பி.யை இரண்டாவது பரிசுக்கு தள்ளி விட்டார்கள். நீதிபதிகளின் முடிவை பாலு மனமார ஏற்றார்.
போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு பின்னணி பாடகி ஜானகி அவர்கள் தலைமை தாங்கினார்.
பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாட மேடைக்கு அழைக்க, முதல் பரிசு பெற்ற இளைஞர் போட்டியில் பாடிய அதே பாடலை பாடிச் செல்ல, இரண்டாவது பரிசு பெற்ற எஸ்.பி.பி. தன் பாடலைப் பாடி முடித்துள்ளார்
பரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் ஏக கோபம். அவரே மைக் முன்னால் வந்து ‘இன்று இரண்டாவது பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட மிக நன்றாகப் பாடியுள்ளான்.
ஆகையால் போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை’ என்று கூறி எஸ்.பி.பி.க்கு முதல் பரிசையும் அந்த வெள்ளிக் கோப்பையையும் வாங்கி தந்தார்.
திரையுலகத்தின் ஒரு பிரபலமான பாடகியால், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அங்கீகாரம் பெற்றவர் எஸ். பி. பி.
பிற்காலத்தில் அன்று பரிசளித்த பாடகியுடனேயே பல பாடல்களைப் பாடியிருக்கின்றார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
நன்றி: முகநூல் பதிவு