விரக்தியிலிருந்து பலரது வாழ்க்கையைத் திசை திருப்பிய பாடல்!

மனது நிம்மதியற்றுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது. மெதுவாகத் தோளைத் தொட்டு ஆறுதல் அளிப்பதைப் போலச் சில பாடல்களும் இருக்கின்றன. சில எழுத்துக்களும் இருக்கின்றன.

திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பில்லை மதுரைக்கு டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுவிடலாம் என வாலி ஐயா முடிவெடுத்தார்.

அந்த நேரத்தில் திரு.பி.பி.சீனிவாஸ் அவர்களை வாலி சந்திக்க தாம் ஒரு புதிய படத்தில் பாடிய பாடலை வாலியிடம் பி.பி.எஸ் அவர்கள் பாடி காண்பிக்க அந்த பாடலை வாலி கேட்ட பிறகு அவருக்குள் ஒரு தன்னம்பிக்கை தீப் பற்றி கொண்டது.

அந்தப் பாடல் தன்னுடைய வாழ்வையே திசை திருப்பி நம்பிக்கை ஊட்டியது என்றிருக்கிறார் வாலி பல சந்தர்ப்பங்களில்.

கவியரசர் கண்ணதாசன் இயற்றிய அந்த நம்பிக்கையூறும் பாடல் இது தான்:
*
“மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில்
அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?”

– 1957-ல் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘சுமைதாங்கி’ படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்தான் இவை. பாடியவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

Comments (0)
Add Comment