அட்லாண்டிக் கடலைக் கடந்து இலங்கையில் இருந்து பாஸ்டன் வரை ஒரு தமிழ்க் கப்பல் சென்றுள்ளது. அட்லாண்டிக் கடலை கடந்த கடைசி பாய்மரக் கப்பல் இதுவே எனக் கூறப்படுகிறது.
1938-ம் ஆண்டு வல்வெட்டித் துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக் கப்பல் வணிகம் செய்து வந்தனர்.
கொச்சின், ரங்கூன் முதல் அரபு நாடுகள் வரை அவர்களின் பாய்மரக் கப்பல்கள் சென்று வந்தன.
1938-ல் வளவை மாரியம்மன் தீர்த்தத் திருவிழாவில் கலந்துகொண்ட அன்னபூரணி எனும் கப்பலின் அழகில் மயங்கிய வில்லியம் ராபின்சன் எனும் அமெரிக்கர் அந்த கப்பலை விலைக்கு வாங்கினார்.
அதை பாஸ்டன் துறைமுகத்துக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஐந்து தமிழ் மாலுமிகளுக்கு வழங்கபட்டது.
சூயஸ் கால்வாய் வழியாக சென்று ஐரோப்பா வழியே அமெரிக்கா செல்லவேண்டும். கொலம்பஸின் கடல்பயணத்தை மிஞ்சிய தூரம்.
கொலம்பஸிடம் மூன்று கப்பல்களும் நூற்றுக்கணக்கான மாலுமிகள் இருந்தனர். இவர்கள் ஐந்தே பேர்.
அத்தனை தடைகளையும் தாண்டி பாஸ்டன் துறைமுகத்துக்கு மூன்று மாதத்தில் கப்பலைக் கொண்டு சென்றுவிட்டனர்.
சட்டை அணியாமல் திருநீறு, குடுமியுடன் கூடிய ஐந்து பேர் பாஸ்டன் துறைமுகத்தில் பாய்மரக் கப்பலில் இறங்கிய காட்சியை காண பாஸ்டன் நகரமே கூடியது.
புகைமூட்டல், காற்று வீசாத கடல் என பல தடைகளை தாண்டி இந்த சாதனையை அவர்கள் செய்தார்கள்.
அதன்பின் அந்த ஐந்து மாலுமிகளும் பாஸ்டனில் தங்கிவிட்டதாக தெரிகிறது.
படத்தில்: அன்னபூரணி கப்பலில் தமிழ் மாலுமிகள்