‘பணக்காரி’ படத்தில் மக்கள் திலகமும் மாயக்கண்ணழகியும்!

மக்கள் திலகமும் மாயக் கண்ணழகி டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்து 1953-ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வெளிவந்த படம் ‘பணக்காரி’.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்., டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைக்க பாபநாசம் சிவன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை இயற்றினர்.

ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனா என்ற நாவலைத் தழுவி அதே தலைப்பில் எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படம் 1935-ஆம் ஆண்டு வெளியானது. அத்திரைப்படம் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனால், முன்னர் சக்ரதாரி திரைப்படத்தை இயக்கிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், அன்னா கரீனா கதையை தமிழில் பணக்காரி என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார்.

‘பணக்காரி’ படத்தில் மக்கள் திலகமும் மாயக்கண்ணழகியும்!

Comments (0)
Add Comment