படித்ததில் ரசித்தது:
யாராலும் அறியப்படாதவராக இருப்பதே மகத்துவமானது, அறியப்படாதவராக இருப்பது என்பது ஒரு மிகப்பெரிய விஷயம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் துரதிஷ்டவசமாக நம்மை ஊதிப் பெரிதாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம்.
நாம் பெரிய மனிதராக ஆக விரும்புகிறோம், நாம் ஊரறிந்தவராக ஆக விரும்புகிறோம், நாம் வெற்றிபெற ஆசைப்படுகிறோம்.
வெற்றி புகழைத் தேடித் தருகிறது, ஆனால் அது ஒரு வெற்று விஷயம், இல்லையா? அது சாம்பலைப் போன்றதாகும்.
ஒவ்வொரு அரசியல்வாதியும் ஊரறிந்தவராக இருக்கிறார், அப்படி அறியப்பட்டவராக இருப்பது அவர் தொழில், ஆகவே அவர் உயர்ந்த மனிதர் கிடையாது.
அறியப்படாதவராக இருப்பதே, மனதுக்குள்ளாகவும் வெளிப்புறமாகவும் யாராகவும் இல்லாமல் இருப்பதே மகத்துவமானதாகும். மேலும் அதற்கு பெருமளவு (மனதுக்குள்) ஆழ்ந்து செல்லுதலும், பெருமளவு புரிதலும், பெருமளவு அன்பும் தேவை.
– ஜே கிருஷ்ணமூர்த்தி