தலைமுடி நரைக்க பல காரணங்கள் உள்ளன. மரபு வழி அல்லது வயது இயல்பான காரணங்களுள் ஒன்று. சில பழக்கவழக்கங்களாலும் இருக்கலாம்.
அதில் ஒன்று தான் புகைப்பழக்கத்தால் வரக்கூடிய இளநரை என சொல்லப்படுகிறது. அதைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.
இது குறித்த ஆய்வு ஒன்று 2010 ஆம் ஆண்டு 207 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்டது.
இந்த பங்கேற்பாளர்கள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டனர். முன்கூட்டிய முடி நரைத்தல் மற்றும் சாதாரண முடி நரைத்தல் என்று பிரிக்கப்பட்டது.
ஆய்வின் முடிவில் 207 பேரில் 104 பேர் 30 வயதுக்கு முன்பே நரைத்த தலைமுடியை (premature hair graying) கொண்டிருந்தனர்.
மற்ற 103 பேர் சாதாரண முடி நரைக்கும் குழுவாகக் கொண்டிருந்தனர்.
இதில் முதலாவதான premature hair graying குழுவில் புகைப்பிடிப்பவர்களின் பாதிப்பு அதிகமாக இருந்தது. புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் இரண்டரை மடங்குகள் premature hair graying உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருந்தது.
இந்த ஆய்வின் மூலம் 30 வயதுக்கு முன்பு நரைத்த முடி தோன்றுவதற்கும் சிகரெட் புகைப்பதற்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
– சங்கீதா