நிரந்தரமானது என எதுவுமில்லை!

படித்ததில் ரசித்தது:

நிழல்
என்னுடையது – இங்கே
நிற்காதே
என்று எந்த மரமும்
பேசியதில்லை – யாரையும் தூக்கி
வீசியதில்லை;

நிலவு என்னுடையது
சூரியன் என்னுடையது
ஒரு கைப்பிடி ஒளியைக்கூட
அள்ளாதே என்று
வானம் மிரட்டியதில்லை;
பகலிலும் இருட்டிலும்
அடித்து விரட்டியதில்லை;

தன் சொத்து மட்டும்
தன்னுடைமை
மற்றவர் சொத்தெல்லாம்
பொதுவுடைமை
என்னும் நகல் தத்துவத்தைக்
கிழித்தெறிந்த பாரதிதாசன்
ஒரு பொருள் தனதெனும்
மனிதரைச் சிரிப்போம்
உடன்படாவிட்டால்
நெருப்பிட்டு
எரிப்போம் என்றார்!

– பாவேந்தர் பாரதிதாசன் பற்றி ஈரோடு தமிழன்பன்.

Comments (0)
Add Comment