சுந்தர் சி – அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் ‘ஒன் 2 ஒன்’!

இயக்குநர் K. திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.சி நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் “ஒன் 2 ஒன்”. படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார்.

சித்தார்த் விபினின் இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் K.திருஞானம் அவருக்கு ஒரு புதிய ஐ ஃபோனை பரிசளித்துள்ளார்.

விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் சி, அனுராக் காஷ்யப் உடன், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

Comments (0)
Add Comment