போட்டியில் வென்றது யார்?

படித்ததில் ரசித்தது:

1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தெய்வம்’ என்னும் படத்தில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே’ பாடல் உருவாக்கத்தின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்தப் பாடல் பதிவின்போது கவிஞர் கண்ணாதாசனுக்கும் இசையமைப்பாளர்  குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் ஒரு செல்லப் போட்டியே நடந்திருக்கிறது. இதை குன்னக்குடி வைத்தியநாதனே பல இடங்களில் கூறியுள்ளார்.

அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசித்ததும் சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இதுதான் போட்டி.

குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறி விடுவார். அப்படி உருவான பாடல் தான், மேலே சொன்ன மருதமலை மாமணியே பாடல்.

ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலில் வாசித்து இதற்கான வார்த்தைகளை கூறுங்கள் என்றார் குன்னக்குடி.

உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் ‘சக்தி சரவணன் முத்துக்குமரனை மறவேன்’.

குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தமில்லாமல் ‘நிச நிச நிச நிச’ என்று மிகக் கடினமாகவும் வேகமாகவும் வாசித்துவிட்டார்.

கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று ‘மலையடி, நதியடி, கடலடி, சகலமும் உனதடி’ என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை சிறிது நேரம் கீழே வைத்துவிட்டு, “ஐயா என்னை விட்டுடுங்க” என்று குன்னக்குடி வைத்தியநாதன் கும்பிட்டதாக அவரே பல இடங்களில் கூறியிருக்கிறார். அப்படி இருந்திருக்கிறார்கள் அன்றைய கலைஞர்கள்.

****************

அந்த பாடல் வரிகள் இதோ:

“கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை;

கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை;

தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை;

தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை;

மருதமலை மாமணியே முருகய்யா,
தேவரின் குலம் காக்கும் வேலய்யா,

ஐயா;

மருதமலை மாமணியே முருகய்யா;

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்;

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்,
ஐயா உனது மங்கல மந்திரமே;

மருதமலை மாமணியே முருகய்யா,
தேவரின் குலம் காக்கும் வேலய்யா,

ஐயா;

மருதமலை மாமணியே முருகய்யா,
தேவரின் குலம் காக்கும் வேலய்யா,

ஐயா;

மருதமலை மாமணியே முருகய்யா;

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்,
பக்தர்கள் கொண்டாடும் கந்தைய்யா;

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்,
பக்தர்கள் கொண்டாடும் கந்தைய்யா;

மருதமலை மாமணியே முருகய்யா,
தேவரின் குலம் காக்கும் வேலய்யா,

ஐயா;

மருதமலை மாமணியே முருகய்யா;

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்;

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்,
நாடி என் வினை தீர நான் வருவேன்;

நாடி என் வினை தீர நான் வருவேன்;

அஞ்சுதல் நிலைமாறி ஆறுதல் உருவாக,
ஏழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன்;

அஞ்சுதல் நிலைமாறி ஆறுதல் உருவாக,
ஏழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன்;

மருதமலை மாமணியே முருகய்யா,
தேவரின் குலம் காக்கும் வேலய்யா,

ஐயா;

மருதமலை மாமணியே முருகய்யா;

சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன்,

நான் மறவேன்;

பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன்,

நான் வருவேன்;

சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன்,

நான் மறவேன்;

பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன்,

நான் வருவேன்;

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே;

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே;

காண்பதெல்லாம் உனது முகம் அது ஆறுமுகம்,
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா;

காண்பதெல்லாம் உனது முகம் அது ஆறுமுகம்,
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா ;

அதிபதியே, குருபரனே,அருள்நிதியே, சரவணனே;

அதிபதியே, குருபரனே, அருள்நிதியே, சரவணனே;

பனியது மழையது நதியது கடலது,
சகலமும் உனதொரு கருணையில் எழுவது;

பனியது மழையது நதியது கடலது,
சகலமும் உனதொரு கருணையில் எழுவது;

வருவாய் குகனே;

வேலய்யா;

மருதமலை மாமணியே முருகய்யா,
தேவரின் குலம் காக்கும் வேலய்யா,
ஐயா;

மருதமலை மாமணியே முருகய்யா…”

திரைப்படம் : தெய்வம்.
பாடல் : கண்ணதாசன்.
பாடியவர் : மதுரை சோமு.
இசை : குன்னக்குடி வைத்தியநாதன்.
இயக்கம் :சின்னப்பா தேவர்.
வெளியான ஆண்டு : 1972

Comments (0)
Add Comment