இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை உலகில் பெயரை மாற்றிக் கொண்ட நாடுகளின் கதைகளை இப்போது பார்க்கலாம்.
சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து உருவாகியதே இந்தியா என்பது வரலாறு. ஆனால் சமீப காலமாக இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன் வைக்கும் நிலையில் வரும் 18ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற 5 நாள் சிறப்பு அமர்வுகளில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்திய அரசு புதிய மசோதாவை தாக்கல் செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா இப்போது தன்னுடைய பெயரை பாரத் என மாற்றிக் கொள்கிறது என்றால், இதற்கு முன்பு எந்தெந்த நாடுகள் நாடுகள் பெயரை மாற்றிக் கொண்டுள்ளது? எதற்காக மாற்றிக் கொண்டனர்? என்பதை உங்களுக்கு சொல்கிறோம்.
உலக நாடுகளில் இதுவரை 12க்கும் அதிகமான நாடுகள் பெயரை மாற்றி உள்ளது. பெர்சியா என்பது ஈரான் எனவும், சியாம் என்பது தாய்லாந்து எனவும், கம்பூச்சியா குடியரசு என்பது கம்போடியா எனவும், பர்மா என்பது மியான்மர் எனவும் மாற்றப்பட்டுள்ளது.
இதேபோல், ஹாலந்த் என்பது நெதர்லாந்து எனவும், ஐரீஸ் ஃபிரி ஸ்டேட் என்பது அயர்லாந்து எனவும், சிலோன் என்பது ஸ்ரீ லங்கா எனவும் மாற்றப்பட்டுள்ளது.
தி ரிபப்ளிக் ஆப் மெசிடோனியா என்பது தி ரிபப்ளிக் ஆப் நார்த் மெசிடோனியா என்றும், சுவாஜிலாந்து என்பது ஈஸ்வதிணி என்றும், ரோடிசியா என்பது ஜிம்பாப்வே என்றும் செக் குடியரசு என்பது செக்கியா என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்ட பெயர்களை பார்த்தோம். இப்போது எதற்காக பெயர்கள் மாற்றப்பட்டது என்பதையும் பார்க்கலாம் ! ராஜாந்திர உறவுகளுக்காக பெர்சியா என்பது ஈரான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சியாம் என்பது மன்னர் ஆட்சிக் காலத்தில் சுட்டப்பட்டது என்பதால் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டவுடன் தாய்லாந்து என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வரலாறுகள் சொல்கின்றன.
கம்பூச்சியா ரிபப்ளிக் எனும் பெயர் கம்போடியா என மாற்றப்படுவதற்கு முன்பாக 3 முறை ஏற்கனவே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. நான்காவது முறையாக தான் கம்போடியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 1989ம் ஆண்டில் ராணுவ ஆட்சி குழு மக்கள் எழுச்சியை அடக்கிய போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை மறைப்பதற்காக பர்மா எனும் பெயர் மியான்மர் என மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹாலாந்து எனும் நாடு நெதர்லாந்து நாட்டுடன் இணைந்ததால் தங்களுடைய பெயரை நெதர்லாந்து என மாற்றிக் கொண்டுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டுடன் போரிட்டு ஐரிஸ் நாடு அயர்லாந்துடன் இணைந்ததால் தங்களது நாட்டின் பெயரையும் அயர்லாந்து என மாற்றிக் கொண்டுள்ளது. மேலும் 1,505 போர்த்துகீசியர்கள் கண்டுபிடித்த நகரமே இலங்கை என அழைக்கப்பட்டது.
ஆனால் பிரிட்டிஷ் பேரரசு 19ம் நூற்றாண்டில் இலங்கை என்பதை சிலோன் என மாற்றினர். ஆனால் சிலோன் என்பதை பிறகு ஸ்ரீலங்கா எனவும் நிர்வாக காரங்களுக்காக மாற்றியுள்ளனர்.
கிரேக்க நாட்டில் மாசிடோனியா எனும் ஒரு நகரம் உள்ளதால் அதிலிருந்து தங்கள் நாட்டை வேறுபடுத்திக் கொள்ளவும் நேட்டோ குழுவுடன் கூட்டணி அமைக்கவும் மாசிடோனியா குடியரசு என்பது அதன் பெயரை மாசிடோனியா வடக்கு குடியரசு என மாற்றிக் கொண்டது என வரலாற்று குறிப்புகளால் சொல்லப்படுகிறது.
இதேபோல் 2018ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் சுவாசிலாந்தின் எனும் நிலப்பரப்பின் மன்னர் எஸ்வதிணி என நாட்டின் பெயரை மாற்றினார். இதற்கு அவர்களது உள்ளூர் மொழியில் தங்களது நிலம் என பொருளாகும்.
ரோடீசியா என்பது ஒரு காலனித்துவ ஆதிக்க பெயராகும். நியூசிலாந்து கூட்டமைப்பில் இருந்து சுதந்திரம் கிடைத்ததற்கு பிறகாக 1980களில் ரோடிசியா என்பது ஜிம்பாப்வே குடியரசு என மறு பெயரிடப்பட்டுள்ளது.
சோவியத் குடியரசு உடைந்த பிறகு 1993 காலகட்டத்தில் ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு என வெவ்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டது.
செக் குடியரசு நாடு ஒரு கட்டத்தில் தங்களை பிற நாடுகள் எளிதாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக செக்கியா என்று மறுபெயரிட்டுக் கொண்டது.
இப்படி உலகிலுள்ள நாடுகளில் தங்களது பெயரை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையப் போகிறது.
சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தோன்றிய பெயர் இந்தியா என வரலாற்றின் மூலம் அறியப்பட்டாலும் ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர் இந்தியா என்பதால் பாரத் என மாற்ற செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
– தேஜேஷ்