சரும பராமரிப்பில் ஆண்களைவிட பெண்கள் தங்களது முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
முகத்தில் அழுக்கு, கருந்திட்டுக்கள், பருக்கள் இல்லாமல் கிளியர் ஸ்கின்னாக இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான பெண்களின் ஆசை. முக அழகை மேம்படுத்திக்கொள்ள அதிக அக்கரையும் எடுத்துக் கொள்வார்கள்.
விதவிதமான அழகு சாதனங்கள், கிரீம்கள், அதிக விலை உயர்ந்த சோப்புகள் என அவர்கள் அலமாரிகளை ஆக்கிரமித்து இருப்பது இவைகள் தான்.
ஆனால், இவையெல்லாம் சருமத்திற்கு எந்த விதமான பாதிப்பும், பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது.
விலை உயர்ந்த அழகு சாதனங்களை விட நமது சமையல் அறையில் இருக்கும் பொருட்களை வைத்து சருமத்தை அழகு படுத்தலாம்.
நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு இதை வைத்து உங்கள் சரும அழகை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
உப்பு ஸ்கரப் செய்ய தேவையானவை:
ஆலிவ் ஆயில் 1/4, இந்து [தூள்] உப்பு ¼
இவற்றை ஒன்றாக கலந்து குளிப்பதற்கு முன் முகம், கழுத்து பகுதியில் தடவி மென்மையாக ஒரு மசாஜ் கொடுக்கவும். அதன் பிறகு தண்ணீர் கொண்டு கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.
உப்பு ஃபேஸ் மாஸ்க் செய்ய தேவையானவை:
உப்பு 2 டீஸ்பூன், தேன் – 4 டீஸ்பூன்
இந்த இரண்டையும் சேர்த்து கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவினால் சருமத்தில் இருக்கும் தேவையில்லாத எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
மேலும் சருமத்தை மென்மையாகவும்,ஈரத்தன்மையுடன் பொலிவுடன் இருக்க உதவுகிறது.
கருவளையம் நீங்க உப்பு வாழ்வியல் மாற்றம், தூக்கமின்மை, மன அழுத்தம், கணினி பார்ப்பது மற்றும் பல காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது.
அதனைப் போக்க ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு கலந்து கருவளையம் இருக்கும் இடத்தைச் சுற்றி மென்மையாக வாரத்தில் 3 முறை 5 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கி பொலிவு பெரும்.
உப்பில் காரத்தன்மை அதிகம் என்பதால் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே உப்பு பேசியல் செய்ய வேண்டும்.
அடிக்கடி செய்தால் அது உங்கள் சருமத்தில் இருக்கும் ஈரத்தன்மையை பாதிப்படைய செய்யும். தொடர்ந்து செய்யும்போது முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்கள் மறைந்து முகம் ஜொலிக்கத் தொடங்கும்.
-யாழினி சோமு