பௌத்த மறுமலர்ச்சியை நேசித்த தலைவர்!

நவீன பௌத்த மறுமலர்ச்சி பற்றி பேசும்போது ஆளுமை என்ற விதத்தில் அயோத்திதாசர் பெயரையும், ஊர் என்ற முறையில் கோலார் தங்க வயல் பெயரையும் அறிந்திருக்கிறோம்.

ஆனால், நவீன பௌத்த மறுமலர்ச்சி பல்வேறு ஊர்கள் சார்ந்தும் ஆளுமைகள் சார்ந்தும் இயங்கியிருக்கிறது. அத்தகைய ஆளுமைகளில் ஒருவர் திருப்பத்தூர் ஏ.பி. பெரியசாமி புலவர் (1881 – 1939).

அயோத்திதாசரின் சமகாலத்திலும், அவருக்கு பின்னாலும் அவர் பார்வையிலான அறிவுக் குழாமினர் தீவிரமாக இயங்கினர்.

புலவரான பெரியசாமி, பண்டிதரின் சாக்கைய பௌத்த சங்கத்தை வளர்த்தெடுத்ததோடு பிற்கால திராவிட – ஆதி திராவிட அரசியலை வட ஆற்காடு மாவட்ட கிராமங்கள் தோறும் வளர்த்தெடுத்தார்.

பேச்சு, பாடல், நாடகம் என்று வெளிப்பட்டார். நிறைய மாநாடுகளை நடத்தினார். இரட்டைமலையார், எம்.சி.ராஜா, பெரியார், லட்சுமி நரசு ஆகியோரோடு நேரடித் தொடர்பிலிருந்தார்.

புலவர் தொடர்ந்து எழுதி வந்திருப்பினும் பண்டிதரின் தமிழன் ஏட்டில் எழுதிய எழுத்துகள் மட்டுமே இன்றைக்கு கிடைக்கின்றன.

அவை சிறிதும் பெரிதுமான கட்டுரைகள், சிறிய – நீண்ட தொடர்கள், கடிதங்கள், பதிலுரைகள், அறிவிப்புகள், பதிவுகள் என்று அமைந்துள்ளன.

அவற்றை முழுமையாக தொகுத்து இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

****

நூல் : பௌத்த மறுமலர்ச்சி முன்னோடி ஏ.பி.பெரியசாமி புலவர் சிந்தனைகள்
தொகுப்பாசிரியர் : முனைவர் பெ.விஜயகுமார்
விலை : ரூ. 500/-

தொடர்புக்கு – 98847 44460

Comments (0)
Add Comment