புதிய சமுதாயத்தை உருவாக்கும் நல்லாசிரியர்கள்!

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றங்கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார்.

அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், “குருவே, சுழல்கள் இல்லை. நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம்” என்றார்.

அப்போது, அரிஸ்ட்டாட்டில், “உன்னை சுழல்கள் எடுத்துச் சென்றிருந்தால் என்னவாகி இருக்கும்” என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த மாணவன், “இந்த அலெக்சாண்டர் போனால், ஆயிரம் அலெக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம்” என்று பதிலளித்துள்ளார்.

அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.

என்றென்றும் மாணவர் உலகில் நறுமணம் வீசிட செய்திடும் ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

Comments (0)
Add Comment