கலைவாணர் அரங்கம் பெயர் சூட்டப்பட்ட நாள்!

தற்போது தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் கலைவாணர் அரங்கம் முன்பு பாலர் அரங்கம் என அழைக்கப்பட்டது. 1971-ல் புதுப்பிக்கப்பட்ட பாலர் அரங்கத்துக்கு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயர் சூட்டினார்.

இன்று சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாட்களில் தினமும் கலைவாணர் பெயரை ஊடகங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இப்படி கலைவாணர் பெயரை ஒலிக்கச்செய்த அந்த மாமனிதர்களுக்கு நன்றி!

குறிப்பு ; 1971 ஆம் ஆண்டு கலைவாணரின் மகள் திருமணத்தை மரியாதைக்குரிய மக்கள் திலகம் அவர்கள், மரியாதைக்குரிய முதல்வர் கலைஞர் தலைமையில் ‘கலைவாணர்’ அரங்கில் நடத்தி வைத்தார்கள்.

நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு

Comments (0)
Add Comment