குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று சாக்லேட். அதன் சுவை தான் அதற்கு காரணம்.
ஆனால், இதில் இனிப்பு சுவையுடன் கூடிய பல நன்மைகளும் ஊட்டச்சத்துக்களும் உள்ளன என்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
இதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல அதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
குறைந்தது 70% கொக்கோ பொருள் இருக்கும் சாக்லேட்டை சாப்பிட வேண்டுமாம். ஒரு சாக்லேட்டில் 700 கலோரி உள்ளதாம்.
இதில் உள்ள ஊட்டச்சத்து சில நோய்களிலிருந்து விடுபட உதவுகிறது.
சர்க்கரை மற்றும் கொழுப்பு இல்லாத டார்க் சாக்லேட் உடலுக்கு மிகவும் நல்லது என்று ஒரு ஆய்வு தெரியவந்துள்ளது.
இதய நோய் பக்கவாதம் வராமல் தடுக்க உதவுவதாக கூறப்படுகிறது.
டார்க் சாக்லேட்டை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் நமது மூளையின் செயல் திறமையை அதிகரிக்கிறது. அறிவுத்திறனை அதிகரிக்க செய்யவும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க உதவுவதாகவும் உள்ளது.
இதய நோய் வரும் அபாயத்தை தடுக்கவும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சைடுகள் புற ஊதாக் கருத்துகளால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. அதேபோல இதனைக் கொண்டு பேசியல் செய்து வருவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.
சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து சருமம் வறண்டு போகாமல் காக்கிறது டார்க் சாக்லேட்.
அதோடு, இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தவும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
மேலும், மருத்துவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப கர்ப்பிணிப் பெண்களின் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க டார்க் சாக்லேட்டை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
– சங்கீதா.