முழுமையான வாழ்க்கையை வாழும் வழி?

  • படித்ததில் ரசித்தது:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவஞானி சாக்ரடீஸ் அற்புதமானதொரு உபதேசத்தைச் செய்தார்.

உன்னையே நீ அறிவாய் என்பதுதான் அந்த உபதேசம். அதையும் மனிதா! என விளித்து, “மனிதா, உன்னையே நீ அறிவாய்” எனச் சொன்னார்.

உலகத்தை அறியும்முன், மற்றவர்களை அறியும்முன், ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் சாக்ரடீஸ் உபதேசத்தின் ஆழ்ந்த கருத்தாகும்.

ஒருவன் தன்னை அறிவது என்றால் என்ன?

தன்னுடைய முழுமையான ஆற்றலையும் அவன் அறிய வேண்டும். அதை அவன் அறிந்து கொள்ளாமல் போனால் அவனுடைய வாழ்க்கை வீணாகிவிடும்.

ஒரு மனிதன் தன்னுடைய முழுப் பரிமாணத்தையும் உணர்ந்து செயல்படுகின்ற போது தான் அவனால் முழுமையான வாழ்க்கையினை வாழமுடியும்.

Comments (0)
Add Comment