1959-ல் பட்சிராஜா ‘மரகதம்’ன்னு ஒரு படம் எடுத்தாங்க. சிவாஜி-பத்மினி ஹீரோ – ஹீரோயினா நடிச்சாங்க. அந்தப்படமும் 100 நாள் ஓடுச்சு. அதில சந்திரபாபு பாடி நடிச்ச ‘குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’ – பாட்டை படம் பார்த்த யாரும் மறந்திருக்க முடியாது.
சந்திரபாபு ஒரு ஜீனியஸ். ஹாலிவுட்டில் ஒரு ஜெர்ரி லூயிஸ், தமிழ்நாட்டில் சந்திரபாபு.
கே. சுப்பிரமணியம் நாட்டியப் பள்ளியில் பரதம் பயின்றவர். தன்னம்பிக்கை மிகுந்தவர். சிவாஜியைக் கூட சமயங்களில் ‘டே’ போட்டுப் பேசி விடுவார்.
போர் முனையில் வீரர்களை ஊக்குவித்த கலைஞர்கள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை ராஷ்டிரபதி பவனில் சந்திக்கச் சென்றிருக்கிறார்கள்.
விருந்து முடிந்து கலகலப்பாக எல்லோரும் பேசிக் கொண்டிருந்தபோது டாக்டர் ராதாகிருஷ்ணன்
-பிறக்கும் போதும் அழுகின்றாய்; இறக்கும்போதும் அழுகின்றாய். ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே’ என்று சந்திரபாபு ‘கவலையில்லாத மனிதன்’ – படத்தில் தான் பாடிய பாடலை, அவர் குரலில் பாட,
உணர்ச்சி வசப்பட்ட சந்திரபாபு – ஒரே தாவாகத் தாவி ராதாகிருஷ்ணன் மடியில் உட்கார்ந்து, ‘நீ பெரிய ரசிகன்டா கண்ணா…! என்று ஜனாதிபதி தாடையைத் தடவிக் கொடுத்துச் சொல்ல, கலைஞர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்களாம்.
‘பாபு’வின் உனக்காக எல்லாம் உனக்காக – ‘புதையல்’ – பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே – ‘மணமகன் தேவை’… புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை – ‘அன்னை’ பட பாடல்கள் எல்லாம் தனித்துவம் மிக்கவை.
‘சகோதரி’ – படம் வெற்றிபெற சந்திரபாபுவுக்கு லட்ச ரூபாய் கொடுத்து 4 நாளில் படமாக்கிய பால்காரன் வேடம் பெரிதும் உதவியது.
– சிவகுமார் எழுதிய கொங்குதேன் என்ற நூலில் இருந்து ஒரு பகுதி
நன்றி: இந்து தமிழ் திசை பதிப்பகம்.