உலக தடகள சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து  தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

அவருக்கு வழங்கப்பட்ட 2வது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து அபாரமாக வென்றுள்ளார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.

இந்திய வீரர் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5ம் இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6ம் இடம் பிடித்தார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2ம் இடம் பிடித்தார்.

Comments (0)
Add Comment