எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஓணம் விழா!

ஓணம் பண்டிகை இந்தியாவில் கேரளத்திலும், தென் தமிழகத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியப் பண்டிகை.

மக்களுக்கு அருள் தரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாள் திருவோணம். இந்த ஓணம் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு.

கேரளாவில் பருவமழை முடிந்ததும் எங்கும் பசுமையாக காணப்படும் நேரத்தில் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகையை, கேரளாவில் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் கொண்டாடி மகிழ்கின்றனா்.

இந்த பண்டிகையின்போது முதல் 10 நாட்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ண பூக்களால் கோலமிட்டு, சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனா்.

கடைசி நாளன்று ஐயப்பன் கோவில்கள் சிறப்பு வழிபாடுகளுடன் பூஜைகள் நடத்தப்படுகிறது.

இந்த விழாவை சிறப்பிக்கும் விதமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கேரளப் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்த மாணவிகள் ஓணம் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடினர்.

மோகினி ஆட்டம், கேரள நடனம் திருவாதிரை களி உள்ளிட்ட நடனங்களும் ஆடல் – பாடல் நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கல்லூரியில் பயிலும் 4200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் ஓணம் பண்டிகைகளில் திரளானோா் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனா்.

Comments (0)
Add Comment