சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு இணையமே வாழ்த்துகளால் நிறைந்த அதே நேரத்தில், பலரும் 2014ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ‘மங்கள்யான்’ திட்டத்தை கிண்டலடித்து வெளியான கார்ட்டூனை பகிர்ந்து “உங்களின் இழிவான கேலிகளுக்கு இஸ்ரோ செயலால் பதிலடி கொடுத்துள்ளது” என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த கார்ட்டூனுக்கு நியூயார்க் டைம்ஸ் மன்னிப்பு கோரியிருந்த நிலையில், இதற்கு பதிலடியாக, ஒரு கார்ட்டூனிஸ்ட், இஸ்ரோ இடத்தில் இருந்து இந்தியா சார்பில் வேற ஒரு கார்ட்டூன் படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆங்கில நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூனில் விண்வெளித்துறையில் மற்ற நாடுகள் முன்னேறி இருப்பதாகவும், இந்தியா மிகவும் பிந்தங்கிய நிலையில் இருப்பதாகவும் வெளியிட்டிருந்தது.
ஆனால், இந்திய கார்ட்டூனிஸ்ட் வெளியிட்ட கார்ட்டூனில் இந்தியா மிகவும் முன்னேறி இருப்பதாகவும், மற்ற நாடுகள் இந்தியாவின் உதவியை நாடும் விதமாக இருப்பதாகவும் கருத்துப்படம் வெளியிட்டிருந்தது.
இந்தப் படம் தற்போது பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.