வாசகர்களையும் நண்பர்களையும் எதிர்பார்க்கிறேன்!

எழுத்தாளர் பவா செல்லதுரை

ஆகஸ்ட் 31-ம் தேதி என் சொல்வழிப்பயணம் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது. எழுத வந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு எழுத்தாளனுக்கு ஏன் புத்தக வெளியீடுத் தேவைப்படுகிறது? என்ற கேள்வியுடன் ஃபேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார் பவா செல்லதுரை.

அது முழுக்க முழுக்க கொண்டாட்டம் மட்டுமே நண்பர்களே. நண்பர்களை சந்திக்க, ஆரத்தழுவிக்கொள்ள, கைகளைப் புதைத்துக்கொள்ள அதுவொரு இனிய தருணம். அவ்வளவுதான்.

நம் மரபே கூத்துக்கட்டும் கலைஞனுக்கு அவன் பங்காளிகளும் நண்பர்களும் மோதிரம் போடுவார்கள்.

என் எஸ்தரும் எஸ்தர் டீச்சரும் கவிதைத் தொகுப்பு வெளியீட்டின்போது, செல்வராஜ் மாமா அரைப்பவுன் மோதிரம் போட்டார்.

புத்தக விமர்சனம், கிழித்து தொங்கவிடுதல் எல்லாம் அப்புறம்.

அது விமர்சர்களின் தலையாயக் கடமை. இது கொண்டாட்டம் மட்டுமே.

இந்நிகழ்வு இனி தொடர்ந்து எழுதுவதற்கான மனநிலையை வாய்க்கச் செய்யும்.

இப்போதுதான் தன் முதல் புத்தகத்தை முகர்ந்தும், தடவியும் பார்த்து பூரிப்படையும் ஒரு இளம் படைப்பாளியின் அதே துள்ளலோடு என் வாசகர்களையும் நண்பர்களையும் எதிர்பார்க்கிறேன் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் பவா செல்லதுரை.

Comments (0)
Add Comment