ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில் கோலோச்சிய நடிகை!

தமிழ், தெலுங்கு திரையுலகில் நடிப்பு, தயாரிப்பு என அனைத்திலுமே கோலோச்சியவர் அஞ்சலிதேவி.

ஆணாதிக்கம் நிறைந்த சினிமா துறையில் ஒரு நடிகை நாயகர்களுக்கு இணையாகப் பேசப்படுவது அபூர்வம்.

சினிமா சரித்திரத்தில் முதன் முறையாக அப்படிப் பேசப்பட்டவர் டி.ஆர் ராஜகுமாரி. அவருக்கு பிறகு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு இரண்டாவது கனவுக் கன்னியாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் அஞ்சலிதேவி.

அன்றைய ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியில் அமைந்த விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரத்தில் 1927 ஆகஸ்ட் 28-ஆம் நாள் அஞ்சலிதேவி பிறந்தார்.  அவரது இயற்பெயர் அஞ்சனம்மா.

சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கியிருந்த அஞ்சலிதேவி, பின்னர் இசையமைப்பாளர் ஆதி நாராயணராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பாகவே இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தார்.

தன்னுடைய 16 வயதில் இயக்குனர் புல்லையா தனது ‘கொல்ல பாமா’ என்ற தெலுங்குப் படத்தில் அஞ்சலி தேவி என்ற பெயரை மாற்றி நடிக்க வைத்தார் ஆதி நாராயணராவ்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழில் அந்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட்டு இருந்தார்கள். அந்த படமும் வெற்றி கண்டது.

மொழிமாற்று படங்களின் மூலம் அஞ்சலிதேவி தமிழக இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பின் அவர் நேரடியாகவே தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அஞ்சலி தேவியின் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றியடைந்தது. அஞ்சலி தேவிக்கு என்று என்ற பெயருக்கு திரையரங்கில் கூட்டம் அலைமோதியது.

அஞ்சலிதேவி நடிப்புடன் நிற்காமல் 27 படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். அந்த வகையில் அஞ்சலி தேவி நடிக்க அவருடைய கணவர் ஆதிநாராயண ராவ் இசை அமைத்து, தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் மணாளனே மங்கையின் பாக்கியம்.

இந்த படம் 1957ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. அஞ்சலிதேவியை மனதில் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் இந்த படத்தை தயாரித்திருந்தார்கள். இரண்டிலும் அஞ்சலிதேவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

தெலுங்கில் கதாநாயகனாக நாகேஸ்வரராவ், தமிழில் ஜெமினி கணேசனும் நடித்திருந்தார்கள். அம்புலிமாமாவில் வரும் அத்தனை ஆவி, பூத, புராணம் அம்சங்களும் இந்த படத்தில் நிரம்பியிருந்தது.

அப்போதே பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.

ஒரு நாட்டின் இளவரசர் ஜெமினிகணேசன். தேவலோக கன்னிகை தான் அஞ்சலி தேவி. இருவரும் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பின் அடுத்து அடுத்து அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் மீதி கதை.

பட முடிவில் அஞ்சலியும், ஜெமினியும் எப்படி இணைந்தார்கள்? அவர்கள் மகன் கிடைத்தாரா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

கதாநாயகனை விட அஞ்சலிதேவி கதாபாத்திரம் தான் படத்தில் அதிகமாக பேசப்பட்டு இருந்தது.

தற்போது இருக்கும் மாயாஜாலக் காட்சிகள் எல்லாம் அப்போதே பயங்கரமாக காண்பித்து இருப்பார்கள். படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப அஞ்சலிதேவி நடித்திருப்பார். 

அப்படிப்பட்ட அபூர்வமான நடிகை அஞ்சலிதேவியின் பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் – 24). அவரை நினைவுகூர்வோம்.  

Comments (0)
Add Comment