படித்ததில் ரசித்தது:
ஒருமுறை நடிகர் லிவிங்ஸ்டன், கலைஞரைப் பார்த்து வாழ்த்து பெற தன் குடும்பத்தினரோடு அவரை சந்திக்க வந்திருந்தார். அவர்களுடன் வந்திருந்த ஒரு குழந்தை குறுக்குமறுக்குமாக அங்கே விளையாடிக் கொண்டிருந்தது.
அந்தக் குழந்தையிடம் கலைஞர் கேட்கிறார், ‘நான் யாரு..?’
அதற்கு அந்தக் குழந்தை ‘கர்ணாநிதி’ என்று சத்தமாகச் சொல்லிச் சிரிக்கிறது.
தனது தாய்க்குப் பிறகு, தன் பெயரை அத்தனை உரிமையாக அழைக்கும் அந்தக் குழந்தையின் மழலைப் பேச்சைக்கேட்டு, அதைவிட குழந்தைத்தனமாக கலைஞர் சிரிக்கிறார்.
இலக்கியம், ஆளுமை, நிர்வாகம் என இவற்றையெல்லாம் தாண்டி, சில நொடிகளே நிகழும் கலைஞரின் சில குழந்தைத்தனங்கள் மிகுந்த இரசனைக்குரியவை.
– முகநூல் பக்கத்தில் படித்து ரசித்தவை.