இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்கள் எடுத்தார். சாம்சன் 40 ரன்களும், ரிங்கு சிங் 38 ரன்களும் எடுத்தனர். ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால்பிரின் நிதானமாக ஆடி 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்க் அடைர் 23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், அயர்லாந்து அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அணி 2 க்கு 0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது.