நினைவில் நிற்கும் வரிகள் :
“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவி நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா!
(அச்சம் என்பது….)
கனக விஜயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேர மகன்
இமய வரம்பினில் ஈமன்கொடி ஏற்றி
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே!
(அச்சம் என்பது….)
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை!
(அச்சம் என்பது….)
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்”
1960-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில், எம்.நடேசன் இயக்கத்தில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’ திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் இது. இசை மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி.