இந்திய பாரம்பரிய மருத்துவம் மிகச் சிறந்தது!

– உலக சுகாதார நிறுவனம்

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையொட்டி குஜராத் தலைநகர் காந்தி நகரில் ஜி-20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.

இதில் பாரம்பரிய மருத்துவம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்றபோது இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின்  தலைவர் டெட்ராஸ் அதானாம் கேப்ரியாசஸ், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் நீண்ட வரலாறு கொண்டவை எனக் கூறினார்.

“ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் மிகச் சிறந்தவை” எனக் கூறிய அவர், இந்த மருத்துவ முறைகள் நல்ல பலன் அளிக்கின்றன என்றும் ஒவ்வொரு நாட்டின் தேசிய சுகாதார திட்டங்களில் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் சேர்ப்பது அவசியம் என்றும் பேசினார்.

அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் மகத்துவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர்கள் பாரதி பிரவீண் பவார், எஸ்.பி.சிங், ஆயுஷ் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் உள்ளிட்டோர் ஜி-20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

Comments (0)
Add Comment