சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு:
சென்னை புதுப்பேட்டை உள்ள கூவம் பகுதியினை சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மழைநீர் செல்லும் பாதைகளில் குப்பை அடைபட்டு இருந்ததைப் பார்த்து ஆணையர் அவரே இறங்கி சுத்தம் செய்தார்.
அதன் பின்னர் சுகாதாரம் குறித்து எடுத்துரைத்த சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதா கிருஷ்ணன், “சென்னை மாநகராட்சி பொருத்தவரை மிகப் பெரிய மாநகராட்சி.
இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் உள்ளன. எளிய மக்கள் வசிக்கக்கூடிய இடங்களும் உள்ளன.
அனைத்து பணியாளர்களும் இன்று நேரடியாக களத்தில் இயங்கி பணியாற்றி வருகின்றனர். கூமுட்டியை பகுதியில் 150 டன் அளவுக்கு குப்பைகள் உள்ளது.
அதனை இபி லிங்க் சாலையில் தொடர்ந்து இரவு நேரங்களிலும் 51 லாரிகள் மூலம் குப்பைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை தெற்கு கூவம் சாலையில் எடுக்கப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்கள் அனைவரும் கையுறை அணிவது கட்டாயம்.
இப்பகுதியில் புதிய கழிப்பிடம் கட்ட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் காரின் இடி பொருட்கள் கட்டிடக்கழிவுகள் அனைத்தும் கூவத்தில் கொட்டப்படுகின்றன.
மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் அதில் அடித்து செல்லும்போது ஏதோ ஒரு இடத்தில் வெள்ளம் ஏற்படும்.
இப்பகுதியில் உரிமைத்தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு ஏற்படுத்தி தர வாக்குறுதி அளித்து இருக்கிறோம்.
இப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் எலிக் காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தொடர்ச்சியாக இப்பகுதியினை சுகாதாரமற்ற நிலையில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இப்பகுதியின் கார்கள் தெருக்கள் ஓரமாக குப்பைகள் கொட்ட கூடாது என்று எச்சரிக்கை பலகை வைக்கப்படும்.
கார்கள் பழுது பார்ப்பதற்கு தனியாக இடம் வழங்கப்படும். பணியாளர்களுடன் சேர்ந்து நானும் இன்று நேரடியாக களத்தில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
12 இடங்களில் இது போன்ற சுகாதாரமற்ற நிலையில் இருக்கின்றன. அவையெல்லாம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
எந்த ஒரு இடத்திலும் 15 நாட்களுக்கு மேல் வாகனம் நிறுத்தி வைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வாகனங்கள் நிறுத்துவதால் தான் டெங்கு கொசு அதிக அளவு உற்பத்தியாகிறது. இது போன்ற குப்பைகள் கொட்டாமல் இருப்பதற்கு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
சாலைகள் அமைக்கும் பொழுது ஓரமாக மழைநீர் செல்வதற்காக வழி வைக்கப்பட்டு உள்ளது. சில சாலைகளில் இது போன்ற இல்லாமல் இருக்கலாம் அங்கு மேம்படுத்தப்படும்.
குப்பையை மொத்தமாக கொட்டும் இடத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இப்பகுதி மக்கள் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள்.
பத்திரிக்கையாளர்களை பல இடங்களில் சுட்டி காட்டி உள்ளார்கள். அதனை நான் மனதார பாராட்டுகிறேன்.
இங்கு வைக்கப்படும் சிசிடிவி கேமரா மர்ம நபர்கள் உடைத்து விடுகிறார்கள், அவர்களை கண்டறிந்து பொது சுகாதார சட்டத்தின் படி சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.